ருசியும்.. ஆரோக்கியமும்... உடல் எடையைக் குறைக்க உதவும் தக்காளி - முட்டை சாலட்! 

ருசியும்.. ஆரோக்கியமும்... உடல் எடையைக் குறைக்க உதவும் தக்காளி - முட்டை சாலட்! 

ருசியும்.. ஆரோக்கியமும்... உடல் எடையைக் குறைக்க உதவும் தக்காளி - முட்டை சாலட்! 
Published on

எடையை குறைக்கும் தக்காளி - முட்டை சாலட் செய்வது பற்றியும், அதிலுள்ள சத்துகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். 

உடல் எடையை குறைக்க என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உணவு கட்டுப்பாடு என்ற ஒன்றை நாம் கருத்தில்கொள்வது அவசியம். நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். குறிப்பாக தக்காளி மற்றும் முட்டைகளை சரியான முறையும் சாப்பிடும்போது எடையை எளிதில் குறைக்கலாம்.

முட்டை, தக்காளி இரண்டையுமே சில நிமிடங்களில் வேகவைத்து விடலாம். ஆனால் இதிலுள்ள சுவை அபாரம். கிச்சனில் இருக்கும் நேரத்தை பாதியாக குறைத்துவிடும் உணவான தக்காளி முட்டை சாலட்டை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். அதேசமயம் இந்த உணவு ஒருபோதும் சலிப்பை ஏற்படுத்தாது. முட்டையில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. எனவே வேகவைத்த முட்டையை சாப்பிட்டபிறகு நொறுக்குத்தீனியை சாப்பிடத் தோன்றாது.

தேவையான பொருட்கள்

தக்காளி - 4 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 3 பல்(நறுக்கியது)
வேகவைத்த முட்டை - 4(நறுக்கியது)
உப்பு - 1 டீஸ்பூன்
கருமிளகு தூள் - 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டை சேர்த்து கிளறவும். அதில் வேகவைத்து துண்டுகளாக்கிய முட்டை, உப்பு, மிளகுத்தூள், ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சேர்த்து பதமாக கிளறவும். கொஞ்சம் கரகரப்பு தேவைப்படுபவர்கள் வறுத்த எள்ளை சேர்த்துக்கொள்ளலாம். முட்டை சாப்பிடாதவர்கள் பனீர் பயன்படுத்தலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com