எடை குறைப்புக்கு டின்னர் சாப்பிட சரியான நேரம் எது? ஆனால் அது 7 மணியல்ல...

எடை குறைப்புக்கு டின்னர் சாப்பிட சரியான நேரம் எது? ஆனால் அது 7 மணியல்ல...
எடை குறைப்புக்கு டின்னர் சாப்பிட சரியான நேரம் எது? ஆனால் அது 7 மணியல்ல...
Published on

ஆரோக்கியமான சரியான உணவுகாளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருநாளைக்கு குறைந்தது ஒருமணி நேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். 7-8 மணிநேரம் நன்றாக தூங்கவேண்டும். மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான உணவு எடுத்துக்கொள்ளுதல் கூடாது என்பவையே உடற்குறைப்புக்கு பெரும்பாலும் கொடுக்கப்படுகிற அட்வைஸ். ஆனால் வெகுசிலராலேயே உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை நீண்ட நாட்களுக்கு கடைபிடித்து நினைத்த உடல்வாகை பெறமுடியும்.

உடல் குறைப்பை பொருத்தவரை எத்தனை கிலோ குறைக்கிறோம் என்பதுதான் முக்கியம். இதற்கு சரியான நேரத்தில் சரிவிகித உணவைவிட வேறு என்ன நல்ல தீர்வை தந்துவிட முடியும்? வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் எந்த நேரங்களில் உணவு சாப்பிடவேண்டும் என்ற பலதரப்பட்ட கருத்துகள் வெளிவருகின்றன. அந்த வரிசையில் உடல் எடையைக் குறைக்க இரவு உணவை எந்த நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது என்பதை புதிய ஆய்வு ஒன்று விளக்கியிருக்கிறது. ஆனால் அது இரவு 7 மணியையோ அல்லது 8 மணியையோ குறிப்பிடவில்லை.

எடை குறைப்பு எப்போது டின்னர் சாப்பிடவேண்டும்?

சமீபத்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் டைமிங் உணவு எடைகுறைப்புக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் சிலருக்கு ஸ்ட்ரிட்டான உணவுமுறை கொடுக்கப்பட்டு, வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

14 வாரங்கள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அவர்கள் அனைவருக்கும் 2.4 கிலோ எடையை குறைந்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்ததுடன், நேர்மறை உணர்வுகள் மேலோங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் டின்னரை மதியம் 3 மணிக்குள் முடித்துக்கொண்டனர் என்பதே. நமக்கு அது மதிய உணவு என்றாலும் இந்த ஆய்வை நடத்திய நிபுணர்கள் அதைத்தான் இரவு உணவு எனக் குறிப்பிட்டுள்ளனர்.

பர்மிங்காமில் உள்ள அலபாமா பலகலைக்கழக நிபுணர்கள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இதனை ‘இடைப்பட்ட உண்ணாவிரதம்’(intermittent fasting) என்றும் கூறலாம். ஒருநாளில் 8 மணிநேரம் உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிடவேண்டும். பிறகு எந்த உணவையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இது எடைக்குறைப்புக்கு உதவும். பொதுவாக இடைப்பட்ட உண்ணாவிரதம் என்றால் அது மதியம் 12 மணியிலிருந்து இரவு 8 மணிவரை இருக்கும். ஆனால் இந்த ஆய்வில் காலை 7 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை உணவு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். வளர்சிதை மாற்றம் காலைநேரத்தில் அதிகமாக இருப்பதால் இது கலோரிகளை அதிவேகத்தில் எரித்துவிடும். இதன்மூலம் தினசரி எடுத்துக்கொள்ளும் 214 கலோரிகள் முழுவதும் எரிக்கப்பட்டு விடும்.

இருப்பினும் இந்த டயட் முறையை பின்பற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்கிறது அந்த ஆய்வு. சிலருக்கு இடையில் பசிக்கும்போது உணவை எடுத்துக்கொள்ள நேரிடும். எனவே மதியம் 12 மணியிலிருந்து இரவு 8 மணிவரை உணவு உட்கொள்வது இதுபோன்ற பசியுணர்வை கட்டுக்குள் வைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com