”ரத்த ஓட்டத்தை சீராக்கும்; இதய ஆரோக்கியம்” பீட்ரூட் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? A - Z தகவல்கள்!

உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புக்கள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் என பலவிதமான ஊட்டச்சத்துக்கள் தேவை.
பீட்ரூட்
பீட்ரூட் முகநூல்
Published on

உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புக்கள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் என பலவிதமான ஊட்டச்சத்துக்கள் தேவை. இவற்றை பழங்கள் மற்றும் காய்கறிகளின் மூலம் நாம் சுலபமாக பெறலாம். இந்தவகையில், பீட்ரூட் இருக்க கூடிய நன்மைகள் என்ன என்பதை குறித்து காணலாம்.

பீட்ரூட்:

பீட்ரூட் என்பது வேரிலிருந்து உருவாக கூடிய காய்கறி. பீட்ரூட்டின் சிவப்பு நிறம் பீட்டாலைன்ஸ் எனப்படும் சிவப்பு நிறமிகளால் ஏற்படுகிறது.

எப்படி யெல்லாம் எடுத்துக்கொள்ளாம்..

  • பிட்ரூட் சாலட்

  • பீட்ரூட் சாறு

  • பீட்ரூட் காப்ஸ்யூல்

  • பீட்ரூட் தூள்

நன்மைகள் என்ன?

  • இதில், பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் சி போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கல் அதிகமாக உள்ளது.

  • பீட்டூட் சாற்றில் பொதுவாக அதிகளவு நைட்ரேட்டுகள் இருக்கிறது. இது இரத்த நாளங்களின் உள்ள பிரச்னைகளை சரி செய்து, இரத்த அழுத்த்தத்தை குறைக்க உதவுகிறது.

  • பீட்ரூட், ஜீஸ், பொறியல், பச்சையாக என எந்த வகையிலும் உட்கொள்ளலாம். குறிப்பாக ஜீஸாக குடிப்பவர்களுக்கு தசையின் வலிமை அதிகரிக்கிறது.

  • பீட்ரூட்டில் கலோரிகள் குறைவாகவும், கொழுப்புகள் இல்லாமலும் இருப்பதால் , ஒரு நாளின் தொடக்கத்தில் இதனை எடுத்து கொள்ளும் போது, அதிக உணவை உட்கொள்ளாமல், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் ஆற்றலும் அதிகரிக்கிறது.

  • தினமும் பச்சையாக பீட்டூட்டை சாப்பிடும் போது, இரத்த சோகை போன்றவற்றை கையாள பயனுள்ளதாக இருக்கும்.

பீட்ரூட்
மத்திய அரசுத்துறைகளில் இத்தனை லட்சம் காலிப்பணியிடங்களா?
  • இதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடன்கள் இதய ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

  • பீட்ரூட்டில் உள்ள பீட்டானின் என்ற வேதிப்பொருள் , உடலில் ஆக்ஸிஜனேற்ற புரதங்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இந்த புரதங்கள் கல்லீரல் உயிரணுக்களுக்கு ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன

  • பீட்ரூட்டின் மூலமாக பித்தப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் இருக்கும் நச்சுத்தன்மை நீக்கப்படுகிறது. மேலும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் தீர்வாக அமைகிறது.

  • பீட்ரூட்டில் மிக அதிகளவு இரும்புச்சத்துக்கள் உள்ளதால்.. உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

பீட்ரூட்
மூளை உண்ணும் அமீபா என்றால் என்ன? உயிர்க்கொல்லியாக மாறுவது ஏன்? தப்பிப்பது எப்படி? முழு விவரம்!
  • பீட்ரூட்டில் உள்ள நச்சு நீக்கும் பண்பு முகத்தில் பருக்கள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தவிர்த்து சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள உதவி புரியும். மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்டுகள் , வைட்டமின்கள் சருமத்திற்கு பொலிவையும், ஆரோக்கியத்தையும் உண்டாக்கும்.

  • பீட்ரூட் ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, உடலின் உள்ள தசைகளுக்கு ஆக்சிஜன் சரியாக சென்று சேருவதற்கும் உதவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com