உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்புடன் இருக்க ஆரோக்கியமான டயட்டுடன், போதிய உடற்பயிற்சியும் அவசியம். எடை குறைப்புக்கு சமூக ஊடகங்களில் போதிய அளவுக்கு ஐடியாக்களும் வழிமுறைகளும் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் சில மிகவும் பயனுள்ளவை. ஆனால் பல தவறாக வழிநடத்தக்கூடியவை மற்றும் உடலுக்கே தீங்கு விளைவிப்பவையும் கூட. எடை குறைப்பு பயணத்தில் இருப்பவர்கள் சிலவற்றை கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.
பசிக்காவிட்டாலும் காலை உணவு கட்டாயம்
காலை உணவு சாப்பிடுவது மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும் என்பது நாம் பெரும்பாலும் கேட்கிற ஒரு அட்வைஸ். எப்படியாயினும், பசிக்காவிட்டாலும் ஒருவர் காலை உணவு உட்பட எந்த உணவையும் எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்கின்றனர் நிபுணர்கள். காலை உணவை தவிர்ப்பது என்பது intermittent fasting போன்றதுதான்; இது உடல் எடையை குறைக்க உதவும் என்கிறனர் அவர்கள்.
தினசரி எடைபார்க்க வேண்டிய அவசியமில்லை
எல்லாருக்கும் எல்லா நாளும் ஒரே மாதிரியாக இருக்காது. தின்சரி எடையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எனவே தினமும் எடை மெஷின்மீது நிற்கவேண்டிய அவசியமில்லை. எனவே சில கலோரிகளை சேர்த்து சாப்பிட்டாலும், அதே வேகத்தில் உடற்பயிற்சியும் செய்து அதிக எடையையும் குறைக்கத் தூண்டும். அடிக்கடி எடை கூடினால் அது எதனால் என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
ஜூஸ் டயட் பின்பற்றுங்கள்
ஜிம்மிற்கு செல்வோருக்கு, எடையை விரைவில் குறைக்க டீடாக்ஸ் ஜூஸ் டயட்டை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுவர். ஆனால் இது குறுகிய காலத்திற்கு மட்டுமே பதிலளித்தாலும், அதே வேகத்தில் எடை அதிகரிப்பும் வழிவகுக்கிறது.
எடைகுறைப்பு கார்டியோ பயிற்சி மிக அவசியம்
கார்டியோ வாஸ்குலார் உடற்பயிற்சிகள் அல்லது ஏரோபிக் பயிற்சிகளை முழு உடல் பயிற்சி என்கின்றனர். இவை உடலின் அழுத்தத்தைக் குறைத்து உறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. எப்படியாயினும் நீண்ட நாட்கள் இதே பயிற்சிகள் மூலம் எடை குறைப்பது என்பது நல்லதல்ல.
கார்டியோ வாஸ்குலார் பயிற்சிகளால் எடை குறைவோர் அவற்றை பின்பற்றலாம். பிறர் பளுதூக்குதல் மற்றும் உணவுகளை குறைத்தல் போன்றவற்றின்மூலம் எடையை குறைக்கலாம். எந்த பயிற்சியாயினும் தசை வலிமையை பராமரிப்பதே சிறந்த யுக்தி.
கொழுப்பு உணவுகளிடமிருந்து விலகியிருங்கள்
எடை குறைப்பு முயற்சியில் இருப்போர் கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்படுவர். ஆனால் அனைத்து கொழுப்பு உணவுகளுமே தீங்கு விளைவிக்கக்கூடியவை அல்ல. புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளைவிட இரண்டு மடங்கு கலோரிகள் கொழுப்பு உணவுகளில் இருக்கிறது. இது நிறைவான உணர்வை கொடுப்பதுடன், செரிமானமும் தாமதமாகிறது. இயற்கையாகவே அதிக கொழுப்புள்ள வெண்ணெய், பருப்புகள் மற்றும் தேங்காய் போன்ற உணவுகள் எடையைக் குறைக்க உதவும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
ஒருநாளில் 2 - 3 முறை சாப்பிடுங்கள்
உணவுகளை சிறிய அளவில் பிரித்து பிரித்து நாள் முழுவதும் சாப்பிடுவது மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். உணவை ஒருநாளில் இரண்டு முறை அதிகளவில் எடுத்துக்கொண்டாலும், 5-6 முறை பிரித்து பிரித்து சாப்பிட்டாலும் கலோரி எரிப்பு என்பது ஒரேமாதிரியாகத்தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எப்படிருந்தாலும் அதிக கலோரி உணவுகளை தவிர்ப்பது சிறந்தது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.