உடலில் கால்சியம் அளவு அதிகமானால் ஆபத்தை விளைவிக்குமா? - எச்சரிக்கும் மருத்துவர்கள்

உடலில் கால்சியம் அளவு அதிகமானால் ஆபத்தை விளைவிக்குமா? - எச்சரிக்கும் மருத்துவர்கள்
உடலில் கால்சியம் அளவு அதிகமானால் ஆபத்தை விளைவிக்குமா? - எச்சரிக்கும் மருத்துவர்கள்
Published on

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையைத்தான் அதிகமாக கேட்டிருக்கிறோம். ஆனால், அதே ஊட்டச்சத்துக்கள் அதிமானாலும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. கால்சியம் நம் உடலுக்கு தேவையான உடல் இயங்க மிக முக்கியமான ஊட்டச்சத்துகளில் ஒன்று.

எலும்பு, இதயம் மற்றும் பற்கள் போன்ற அனைத்தும் சீராக இருக்க, இயங்க கால்சியம் அவசியம். கால்சியம் குறைவு ஏற்படும்போது, ஆஸ்டியோபோரோஸிஸ், ஹைபோகால்சீமியா மற்றும் ஆஸ்டியோபெனீயா போன்ற பல குறைபாடுகள் உடலில் உருவாகிவிடும். அதுவே கால்சியம் அதிமானாலும் உடலுக்கு தீங்குதான்.

  • அதிக கால்சியம் எப்படி தீங்கு விளைவிக்கிறது?

உடலில் கால்சியம் அதிமாவதை ஹைபர்கால்சீமியா என்று அழைக்கின்றனர். உடலில் நீரேற்றமின்மை, கால்சியம் அதிமுள்ள உணவுகளை உண்ணுதல், ஹைபர் - தைராய்டிஸம் மற்றும் கிரானுலோமாட்டஸ் போன்ற பிரச்னைகளும் ஹைபர்கால்சீமியாவுக்கு வழிவகுக்கும்.

  • அறிகுறிகள்:

மயக்கம், தசைப்பிடிப்பு, எலும்பு வலி, குமட்டல், மலச்சிக்கல், அதிகமாக சிறுநீர் கழித்தல், அதிக தாகம், எரிச்சல் போன்ற அறிகுறிகளை வைத்து உடலில் கால்சியம் அதிகரித்திருப்பதை தெரிந்துகொள்ளலாம். இது சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக கற்கள், டிமென்ஷியா, குழப்பம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய நோய்களுக்கு காரணியாக அமைந்துவிடும். ஹைபர்கால்சீமியா பிரச்னை அதிகமாக உள்ளவர்கள் கோமா நிலைக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  • அளவாக சாப்பிடவேண்டிய கால்சியம் நிறைந்த உணவுகள்:

சீஸ்: கால்சியம் சத்து சீஸில் அதிகமுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதன் சுவை அபாரம் என்பதால் அளவுக்கதிகமாக சாப்பிடத் தோன்றும். அது உடல் எடையை அதிகரிப்பதுடன் ஹைபர்கால்சீமியாவுக்கும் வழிவகுக்கும்.

பசலைக்கீரை: பசலைக்கீரையில் கால்சியம் உட்பட, பல எண்ணற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. அதேசமயம் இதை அதிகமாக உண்ணும்போது, இதிலுள்ள ஆக்சலேட் போன்ற கனிமங்கள் சிறுநீரக கல் உருவாக காரணமாகிறது.

நட்ஸ்: நட்ஸை பொருத்தவரை இவை நல்ல கொழுப்புகளை உடலில் சேர்க்கும். மேலும் கால்சியம் நிறைந்தது. இது உணவில் அதிக கலோரியை சேர்ப்பதால் எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது.

பீன்ஸ்: பீன்ஸில் கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளது. இதை அதிமாக சாப்பிடும்போது வயிறு பெருத்தல் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

சோயா மில்க்: வேகன் உணவுமுறையை பின்பற்றுகிறவர்கள் மத்தியில் இந்த மில்க் மிகவும் பிரபலம். இது கால்சியம் நிறைந்தது. இதில் ஐசோஃப்ளேவோன்கள் நிறைந்துள்ளதால் அதிகமாக குடிக்கும்போது நீண்ட நாள் உடல்பிரச்னை மற்றும் கருத்தரித்தல் பிரச்னைகளை உருவாக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com