உலகம் முழுவதும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் முக்கியமானது கருப்பு மிளகு. 'மசாலாப் பொருட்களின் ராஜா' என்று அழைக்கப்படும் இது, சமையலுக்கு மடுட்மன்றி உணவை அலங்காரப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
கருப்பு மிளகு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டதும்கூட. உதாரணத்துக்கு, கருப்பு மிளகை உட்கொள்வதன், எடை இழப்புக்கு உதவுகிறது. போலவே செரிமானத்திற்கும் நல்லது. உடலை நச்சுத்தன்மையாக்கி புற்றுநோயைத் தடுக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. மட்டுமன்றி கருப்பு மிளகு குடல் மற்றும் வயிற்றை சுத்தப்படுத்தவும் உதவுமாம். இப்படியாக உணவின் சுவையை அதிகரிப்பதுடன் சேர்த்து, பல நன்மைகளையும் கொடுக்கும் இதன் நன்மைகளை நமக்காக பட்டியலிட்டார் ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்திணி.
இதுகுறித்து அவர் நம்மிடையே பகிர்ந்தவை:
“நலன்கள்
கருப்பு மிளகில், பைபரின் (Piperine) சத்து மிக முக்கியமானது. பைப்பரின் என்பது, ஒரு இயற்கை ஆல்கலாய்டு ஆகும். இது கருப்பு மிளகுக்கு அதன் கடுமையான சுவையை அளிக்கிறது. பைப்பரின் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு, பெருந்தமனி தடிப்பு, இதய நோய் மற்றும் நரம்பியல் பிரச்னைகள் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
100 கிராம் கருப்பு மிளகு ஊட்டச்சத்து மதிப்பு
கலோரிகள் - 304
புரதம் - 11.5 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள் - 49.2 கிராம்
நார்ச்சத்து - 35.3 கிராம்
கொழுப்பு - 6.8 கிராம்
கால்சியம் - 460 மி.கி
இரும்பு - 12.4 மி.கி
மெக்னீசியம் - 171 மி.கி
பாஸ்பரஸ் - 198 மி.கி
பொட்டாசியம் - 1.4 கிராம்
சோடியம் - 20 மி.கி
துத்தநாகம் - 1.31 மி.கி
மாங்கனீசு - 4.14 மி.கி
ஊட்டச்சத்து நன்மைகள்:
1. புற்றுநோய் தடுப்புக்கு உதவி:
கருமிளகை மஞ்சளுடன் கலந்து சாப்பிட்டால் அது புற்றுநோய் தடுக்க உதவும். காரணம், இதில் புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களைக் குணப்படுத்த உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.
2. செரிமானத்திற்கு நல்லது:
கருப்பு மிளகு நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. இதை அப்படியே சாப்பிடும்போது, ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் வெளியிடப்படும். அது, குடல்களை சுத்தப்படுத்த உதவும். மற்றும் பிற இரைப்பை குடல் நோய்களையும் தடுக்கும்.
3. மலச்சிக்கலைத் தடுக்கிறது:
வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக மலம் வெளியேறினால், உடல் நமலச்சிக்கலால் பாதிக்கப்படலாம். அப்படியானவர்கள், தினமும் உணவில் சிறிது மிளகு சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். கருப்பு மிளகு தினமும் உட்கொண்டால், பெருங்குடல் புற்றுநோய், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வகையான பாக்டீரியா வகை நோய்களும் தடுக்கப்படும்.
4. தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கிறது:
கருப்பு மிளகு, சருமத்தை எந்த விதமான நிறமியிலிருந்தும் பாதுகாக்கும். மேலும் இது சருமத்தின் அசல் நிறத்தை பராமரிக்கவும் உதவும். சிறு வயதிலிருந்தே கருமிளகை உட்கொண்டால் சுருக்கங்கள் மற்றும் தோல் பிரச்சனைகள் கட்டுப்படும். முன்கூட்டிய முதுமை மற்றும் கரும்புள்ளிகளையும் இது தடுக்கும்.
5. எடை இழப்புக்கு உதவும்:
உடல் எடையை குறைக்க கருப்பு மிளகு உதவும். ஆகவே இதை கிரீன் டீயில் தினமும் சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை உட்கொள்ளலாம். ஏனென்றால், அதிகப்படியான கொழுப்பை உடைக்க உதவும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ், இதில் நிறைந்துள்ளது. அது, உடலின் மெட்டபாலிசத்தையும் மேம்படுத்தி, எடை இழப்புக்கு வழிவகுக்கும். க்ரீன் டீ மற்றும் அதில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.
6. மனச்சோர்வுக்கு சிகிச்சையளிக்கிறது:
மனச்சோர்வு என்பது உலகளவில் பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. கருப்பு மிளகை மனச்சோர்வு உள்ளவர்கள் மெல்லுவதால், அவர்கள் மனநிலையை சீர்படுத்தும் ரசாயனங்கள் மூளைக்கு செல்லும். இது மனதை அமைதியாகவும், நிதானமாகவும் வைத்திருக்க உதவும். இருப்பினும், இதை அதிகமாக செய்யக்கூடாது.
7. சுவாச நோய்களுக்கான சிகிச்சையில் உதவுகிறது:
சளி மற்றும் இருமல் போன்ற சாதாரண சுவாச பிரச்சனைகள், கருப்பு மிளகு உட்கொள்வதன் மூலம் குணமாகும். கிரீன் டீயில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகை சேர்த்துகூட குடிக்கலாம். அல்லது ஒரு கிளாஸ் பாலுடன், ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து சூடாக உட்கொள்ளலாம். இதனால் பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதால் அச்சம் தேவையில்லை.
பிற காலங்களை விடவும், குளிர்காலத்தில் சிறிது மிளகு சேர்த்து உண்பது, ஆரோக்கித்துக்கு உதவும். அந்த நேரத்தில் ஏற்படும் பல்வேறு சுவாச நோய்களில் இருந்து தடுக்கும். கருப்பு மிளகு சிறிது தேனுடன் கலந்து, மார்பு நெரிசலைத் தடுக்கவும் உதவும்.
8. மூட்டு வலியைக் குறைக்க உதவும்:
மூட்டு வலி, கீல்வாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகெலும்பு மற்றும் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அப்பிரச்னையை தடுக்க கருப்பு மிளகு பயன்படுத்தப்படும்.
9. உடலின் நச்சை நீக்கும்:
கருப்பு மிளகு, நிறைய வியர்வை வெளியேறவும், அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் வழிவகுக்கும். இதன் மூலம், உடலில் இருந்து அனைத்து நச்சுகளும் வெளியேறும்.
10. பல நோய்கள் தடுக்கப்படும்:
புற்றுநோய், இதய பிரச்னைகள், நீரிழிவு, ஆஸ்துமா உட்பட பல நாள்பட்ட அல்லது நீண்ட கால நிலைமைகளுக்கு, வீக்கம் (Inflammation) அடிப்படை காரணமாகும். கருப்பு மிளகில் உள்ள பைபரின், வீக்கத்தை திறம்பட எதிர்த்துப் போராடுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அந்நோய்கள் பெரும்பாலும் தடுக்கப்படும்
11. மூளைக்கு நல்லது:
நினைவாற்றலை அதிகரிப்பது போன்ற மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த, அதில் பைபரின் (Piperine) பங்கு இன்றியமையாததாக உள்ளது. அந்த வகையில் பார்கின்சன் அல்லது அல்சைமர் போன்ற நினைவு சீரழிவு நிலைமைகளை மேம்படுத்தும் போது இந்த மிளகு மூளைக்கு நல்லது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
12. ரத்த சர்க்கரையை அளவை மேம்படுத்துகிறது:
சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவை தாராளமாக கருப்பு மிளகு தூவி சாப்பிடலாம். ஏனெனில் கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள் ஒருவரின் ரத்த குளுக்கோஸின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
13. கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்:
அதிக கொலஸ்ட்ரால் அளவுகள், மாரடைப்புக்கான எச்சரிக்கையாகும். கருப்பு மிளகின் வழக்கமான நுகர்வு, அதிலுள்ள பைபரின் கலவையின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
14. மிளகு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது:
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடல் உட்கரிக்க, கருப்பு மிளகு உதவுகிறது. கால்சியம் மற்றும் செலினியம் போன்ற சில ஊட்டச்சத்துக்களின் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.
15. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம்:
கருப்பு மிளகு ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான மூலமாகும். இந்த ஆக்ஸிஜனேற்றிகள் நமது உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் உருவாகும் மூலக்கூறுகளான ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. ஃப்ரீ ரேடிக்கல் என்பது ரசாயனங்கள், நச்சுகள், மாசுக்கள், மாசுபாடு, தீங்கு விளைவிக்கும் கதிர்கள் போன்றவற்றின் மூலமாக உடலில் உருவாகுபவை. இவை சில நேரங்களில் உடல் சேதத்திற்கு வழிவகுக்கக்கூடும். அப்படியான இதை எதிர்த்து கருப்பு மிளகின் தன்மைகள் போராடும்.