உலகம்

டவுன் சிண்ட்ரோம் பாதிப்பால் கேலிக்கு ஆளான சிறுமி - மாசிடோனியா அதிபர் செய்த அற்பத செயல்!

டவுன் சிண்ட்ரோம் பாதிப்பால் கேலிக்கு ஆளான சிறுமி - மாசிடோனியா அதிபர் செய்த அற்பத செயல்!

கலிலுல்லா

டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டதால் கேலிக்கு ஆளான சிறுமியுடன் பள்ளிக்கு சென்று அனைவரும் சமம் என்பதை உணர்த்தியுள்ளார் வடக்கு மாசிடோனியா அதிபர்.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் அதிபர் 11 வயது சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்லும் இந்த புகைப்படம் உலக கவனம் பெற்றுள்ளது. இந்த சிறுமியின் பெயர் எம்ப்லா அடெமி. டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட இவர் பள்ளியில் சக மாணவர்களால் கேலிக்கு உள்ளாக்கப்பட்டார். இது தவறு, இந்த உலகில் அனைவரும் சமம் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாக அதிபர் ஸ்டீவோ பெண்டாரோவ்ஸ்கி அந்த சிறுமியை தானே பள்ளிக்கு அழைத்து சென்றார். முதலில் சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்த அவர், சிறுமியுடன் உரையாடி பரிசுகளை வழங்கினார்.