உலகம்

”எனக்கு தெரியும் இது கடினமான நேரம் என்று”-ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து மார்க் சொல்வதென்ன?

”எனக்கு தெரியும் இது கடினமான நேரம் என்று”-ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து மார்க் சொல்வதென்ன?

Abinaya

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மற்றும் புதிதாக பணியமர்த்தலையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த ஆண்டு செய்யப்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப பணிநீக்கங்களில் இது ஒன்றாகும். மெட்டாவின் 18 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக செய்யப்பட்ட மிக பெரிய பணிநீக்கம் இது தான்.

11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறித்து பேசியுள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க். ’இந்த முடிவை எடுக்கும் நிலை வந்ததற்கு நான் பொறுப்புயேற்று கொள்கிறேன். இது அனைவருக்கும் எத்தனை கடினமான நிலை என்பதை நான் அறிவேன். அதிலும் குறிப்பாக இந்த முடிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் வருந்துகிறேன்’’ என்றுள்ளார்.

”இன்று எங்கள் நிறுவனம் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளோம். பில்லியன் கணக்கான மக்கள் எங்கள் சேவைகளால் இணைக்கப்பட்டு வருகின்றனர். எங்களது சேவைகளை பயன்படுத்தும் மக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். எங்களுடைய முக்கிய வணிகமான சமூக ஊடகங்கள் லாபகரமாக ஒன்றாக இருக்கிறது. நாங்கும் சறுக்கிய இடத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட்டால், இந்த வீழ்ச்சியிலிருந்து முன்னெப்போதையும் விட வலுவாக மீண்டு வெளியே வருவோம் என நம்புகிறேன்” என்றுள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் நிலை?

மெட்டா 16 வார அடிப்படை ஊதியம் மற்றும் சேவையின் ஒவ்வொரு வருடத்திற்கும் இரண்டு கூடுதல் வாரங்கள், எந்த வரம்பும் இல்லாமல் செலுத்தும். இது ஊழியர்களுக்கு மீதமுள்ள அனைத்து கட்டண நேர விடுமுறைக்கும் (PTO) செலுத்தும். பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களும் இந்த மாதம் நவம்பர் 15ம் தேதி அன்று தங்கள் நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.

இத்துடன், உடல்நலக் காப்பீட்டுப் பலன்கள் மற்றும் வேலை விசாவில் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு குடியேற்ற ஆதரவின் சலுகை போன்றவை அடங்கும். மேலும் ஆறு மாதங்களுக்கு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவச் செலவை மெட்டா ஈடு செய்யும்.

வேலை விசாவில் அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு, ஜுக்கர்பெர்க் கூறியது, “நீங்கள் விசாவில் இங்கு இருந்தால் இது மிகவும் கடினம் என்று எனக்குத் தெரியும். பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன் அறிவிப்புக் காலம் மற்றும் சில விசா சலுகைக் காலங்கள் உள்ளன, அதாவது ஒவ்வொருவரும் தங்கள் குடியேற்ற நிலையைத் திட்டமிடுவதற்கும் வேலை செய்வதற்கும் நேரம் கிடைக்கும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என்ன தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு வழிகாட்டுவதற்கு நிபுணர்களை கொண்டுள்ளோம்.’’ என்றுள்ளார்.