உலகம்

பெனசிர் கொலைக்கு அவர் கணவரே பொறுப்பு: முஷராப்

பெனசிர் கொலைக்கு அவர் கணவரே பொறுப்பு: முஷராப்

webteam

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொல்லப்பட்டதற்கு அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரியே பொறுப்பு என்று முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் தெரிவித்துள்ளார். 

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது, பெனாசிர் பூட்டோ சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுடன், மனிதவெடிகுண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டதில் பெனாசிர் உள்பட மொத்தம் 24 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முன்னாள் அதிபர் முஷரப்பை தேடப்படும் குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்த நிலையில், முகநூலில் பதிவிட்டுள்ள முஷாரப், பெனசிர் புட்டோவின் கொலையில் அதிக பலன் பெற்றவர் அவரது கணவர் சர்தாரிதான் என்று கூறியுள்ளார்.