உலகம்

மரத்தினாலான கம்ப்யூட்டர் கீ-போர்ட்.. அசத்தலான கண்டுபிடிப்பு..

மரத்தினாலான கம்ப்யூட்டர் கீ-போர்ட்.. அசத்தலான கண்டுபிடிப்பு..

JustinDurai

தஜிகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் மரத்தினால் ஆன கம்ப்யூட்டர் கீபோர்டை உருவாக்கி அசத்தியுள்ளார்.

தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது சேனலில் வெளியான வீடியோ ஒன்று நெட்டிசன்களின் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் கம்ப்யூட்டரை இயக்குவதற்கு நாம் வழக்கமாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் கீ-போர்டுக்கு மாற்றாக, மரத்தினால் செய்யப்பட்ட கீ-போர்டை தத்ரூபமாக  உருவாக்கி, அதைக் கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறார்.

சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மின்னணு கழிவுகளை மண்ணில் புதைத்து அழிப்பதைவிட மறு சுழற்சி செய்வது எளிது மட்டுமின்றி, அதற்கான செலவும் குறைவு என வீடியோவில் அந்த யூடியூபர் தெரிவித்துள்ளார்.