மேயர் பிரிஜிட் கார்சியா முகநூல்
உலகம்

ஈக்வடார் நாட்டில் இளம் பெண் மேயர் சுட்டுக்கொலை - என்ன நடந்தது?

ஈக்வடார் நாட்டின் இளம் பெண் மேயர் கார்சியா சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஈக்வடார் நாட்டின் சான் விசென்டின் நகரத்தின் சிட்டிசன் ரெவல்யூஷன் கட்சியைச் சேர்ந்த இளம் பெண் மேயர், பிரிஜிட் கார்சியா (27). இவர் கடந்த ஆண்டு அப்பகுதியில் நடைபெற்ற மேயர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

பிரிஜிட் கார்சியா

மேயர் பிரிஜிட் கார்சியா மற்றும் அவரின் தகவல் தொடர்பு இயக்குநரான ஜெய்ரோ லூர் ஆகியார் கடந்த ஞாயிற்றுகிழமை (24.03.2024) அன்று காரில் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர்களின் மரணம் குறித்து அப்பகுதி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ படுகொலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிஜிட் கார்சியா

ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கடுமையாக விமர்சிப்பவரான வில்லவிசென்சியோ, தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு பிரசார நிகழ்விலிருந்து வெளியேறும் போது கொல்லப்பட்டார். இந்நிலையில் கார்சியாவும் ஆயுதம் ஏந்திய வன்முறையாளர்களால் படுகொலை செய்யப்பட்டிருப்பது, அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.