ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 29 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் அரசு படைக்கு ஆதரவாகவும் சவுதி தலைமையிலான கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பகுதியான சாடா மாகாணத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் , குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சவுதி கூட்டுப்படைகள் நடத்திய இந்த தாக்குதலில் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் 29 பேர் உயிரிழந்ததாக, ஏமனில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த வான்வழித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் கூடிய, முழுமையான விசாரணை நடத்த சவுதி கூட்டுப்படைகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.