பாஸ்போர்ட் எக்ஸ் தளம்
உலகம்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்| முதல் இடத்தில் சிங்கப்பூர்..இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்!

சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Prakash J

பாஸ்போர்ட்டின் சக்தியை தீர்மானிப்பதில் சர்வதேச உறவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வலுவான இராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகள் பெரும்பாலும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ளன. அவை தங்கள் குடிமக்களுக்கு மற்ற நாடுகளுக்கு விசா இல்லாத விரிவான அணுகலை வழங்குகின்றன.

அந்த வகையில், உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. இதுகுறித்த பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலின்படி 195 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை சிங்கப்பூர் பாஸ்போர்ட் வழங்குகிறது.

2வது இடத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கி வருகின்றன.

மூன்றாவது இடத்தில், ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் 191 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலைப் பெற்றுள்ளன.

நியூசிலாந்து, நார்வே, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து, ஐக்கிய ராஜ்யம் ஆகிய நாடுகள் 191 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியாவும் போர்ச்சுகலும் 189 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலைப் பெற்று 5வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

இதையும் படிக்க: அமெரிக்கா | செய்யாத குற்றத்துக்காக 43 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பெண்.. உண்மை வெளிவந்தது எப்படி?

கிரீஸ் மற்றும் போலந்து 188 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலைப் பெற்று 6வது இடத்தையும், கனடா, செக்கியா, ஹங்கேரி, மால்டா ஆகிய நாடுகள் 187 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலைப் பெற்று 7வது இடத்தையும் பிடித்துள்ளன.

அதேசமயம், அமெரிக்கா எட்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது, 186 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலைப் பெற்றுள்ளது. 9வது இடத்தில் எஸ்டோனியா, லிதுவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் 185 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலையும், 10வது இடத்தில் ஐஸ்லாந்து, லாட்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் 184 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலையும் பெற்றுள்ளன.

இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் 58 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பாஸ்போர்ட் 82வது இடத்தில் உள்ளது.

செனகல் மற்றும் தஜிகிஸ்தான் இதே இடத்தில் (82) உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானும், ஏமனும் 100வது இடத்தில் உள்ளது. இந்நாடுகளில் 33 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனஆப்கான்ஸ்தான் 103வது இடத்தில் உள்ளது. இந்நாட்டில், 26 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: குஜராத்| 88 வீடுகள்.. 700 மக்கள்.. போலி ஆவணம் மூலம் ஒரு கிராமத்தையே விற்ற 6 பேர்.. நடந்தது என்ன?