உலகம்

உலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்!

உலக தமிழர் மாநாடு : 60 நாடுகளின் தமிழர்கள் சங்கமம்!

webteam

கம்போடியாவில் உள்ள சியாம் ரீப் என்ற இடத்தில் உலக தமிழர்கள் மாநாடு நடைபெற்றது.

கம்போடியாவில் நேற்று மற்றும் இன்று உலக தமிழர்கள் மாநாடு நடைபெற்றது. சியாம் ரீப் என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில்
நடைபெற்ற இந்த மாநாட்டை கடல்சார் பண்பாட்டு ஆய்வாளரும், பன்னாட்டு தமிழ் பண்பாட்டு ஆய்வு அறக்கட்டளையின்
பொதுச்செயலாளருமான ஒரிசா பாலு உள்ளிட்ட பலர் இணைந்து, நடவடிக்கை எடுத்து நடத்தியுள்ளனர். இந்த மாநாட்டின் நோக்கம்
தமிழகம் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குறித்து அனைவரும் அறிய
வேண்டும் என்பதாகும். இந்த மாநாட்டில் சுமார் 60 நாடுகளில் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் பெற்று வாழும் தமிழர்கள் பங்கேற்றனர். 

மாநாடு நடத்தப்பட்ட கம்போடியாவில் உள்ள மரங்கள் மற்றும் நிலபரப்பு தமிழகத்தில் உள்ளது போன்றே தோற்றமளிக்கிறது. அங்கு
வாழும் மக்களும் தமிழர்களின் பாரம்பரியத்தை கொண்டே உள்ளனர். அதன்படி பார்த்தால் தமிழர்கள் வணிகத்திற்கான சென்ற
இடங்களில் கம்போடியா ஒன்று என்பது தெரியவந்துள்ளது. தற்போது 160 நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே இந்த தமிழர்கள் அனைவரும் வணிகம் மற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவதே இந்த மாநாட்டின் நோக்கமாக இருந்தது. இதில் நடிகர் சரத்குமார் மற்றும் இயக்குநர் தங்கர் பச்சான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.