உலகம்

'உலகின் அசிங்கமான நாய்': கீரிடம் வென்றது 'மார்த்தா'

'உலகின் அசிங்கமான நாய்': கீரிடம் வென்றது 'மார்த்தா'

webteam

'உலகின் அசிங்கமான நாய்' என்ற போட்டி, கடந்த 29 ஆண்டுகளாக, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் பெட்டலுமாவில் நடைபெற்று வருகிறது.

இதில் மார்த்தா எனும் நாய் 13 போட்டியாளர்களை தோற்கடித்து முதல் பரிசு பெற்றது. சிவப்பு கண்களுடன், தோல்கள் மிகுந்த மடிப்புகளுடன், கீழ் தாடையில் அதிக சதைக் கொண்ட மாஸ்டினோ இனத்தைச் சேர்ந்த இந்த நாய், பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது. 3 வயதாகும் மார்த்தாவிற்கு பரிசாக கோப்பையும், 1500 அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டது. 

மார்த்தா பற்றி அதன் உரிமையாளர் ஜின்ட்லர் கூறுகையில், இது நாய்கள் பாதுகாப்பு மையத்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்டது என தெரிவித்தார். அப்போது மார்த்தா பார்வை திறனை இழந்து இருந்தது. பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு மார்த்தாவால் தற்போது பார்க்க முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து  நடுவர்கள் கூறுகையில், இந்த போட்டி நாய்களை தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக நடத்தப்படுகிறது. மார்த்தா அனைத்திலும் வித்தியாசமாக இருந்ததால் கிரீடத்தை வென்றதாக நடுவர்கள் தெரிவித்தனர்.