உலகம்

உலகிலேயே மிகவும் வசிகரிக்கபட்ட பிரபலங்கள் பட்டியல் - மோடிக்கு எந்த இடம்?

உலகிலேயே மிகவும் வசிகரிக்கபட்ட பிரபலங்கள் பட்டியல் - மோடிக்கு எந்த இடம்?

webteam

லண்டன் ஆராய்ச்சி நிறுவனமான யுகோவ், உலகிலேயே மிகவும் வசீகரிக்கப்பட்ட பிரபலங்களில் யார் யார்? என்பது குறித்து பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்திய பிரபலங்கள் பலர் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். 

இந்த ஆய்வில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, நடிகர் ஜாக்கி ஜான், சீன அதிபர் ஜிஜின்பிங், அலிபாபா நிறுவனர் ஜாக்மா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் கால்ப்ந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில், உலகிலேயே மிகவும் ஈர்க்கப்பட்ட ஆணாக பில்கேட்ஸும், பெண்மணியாக ஏஞ்சலினா ஜோலியும் திகழ்ந்தனர். அரசியல் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகபெரிய ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.

உலகிலேயே மிகவும் ஈர்க்கப்பட்ட பெண்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலிக்கு முதலிடம். ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா, தொலைக்காட்சி ஆளுமை ஓபரா வின்பிரே, ராணி எலிசபெத் , அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், நடிகை எம்மா வாட்சன், நோபல் பரிசு வென்ற மலாலா யூசுஃப், ஜெர்மன் அதிபர் அஞ்சலே மெர்க்கெல், பாடகிகள் டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் மடோனா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றுள்ளனர். இந்திய நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் 11, 12 மற்றும் 13 வது இடங்களில் உள்ளனர்.

இது 35 நாடுகளில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் தலா 20 ஆண்கள் மற்றும் பெண்கள் என பிரபலங்களை தேர்தெடுக்கப்பட்டதாக யுகோவ் கூறுகிறது.