உலகம்

உலகில் முதன்முறையாக செயற்கை கருவூட்டல் முறையில் வளர்க்கப்பட்ட குரங்குகள்

உலகில் முதன்முறையாக செயற்கை கருவூட்டல் முறையில் வளர்க்கப்பட்ட குரங்குகள்

Sinekadhara

உலகில் முதன்முதலாக செயற்கை கருவூட்டல் முறையில் வளர்க்கப்பட்ட ஃபிராங்கோயிஸ் வகையின குரங்குகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபிராங்கோயிஸின் லங்கூர்ஸ் என அழைக்கப்படும் இந்த வகை குரங்குகள் சீனாவில், அரிதாகிவரும் வனவிலங்குகளின் பட்டியலில் உள்ளது. கியுஸூ, சோங்கிங் மற்றும் வியட்நாமின் வடக்கு மலைப்பகுதிகளில் இந்த குரங்குகள் அதிகம் காணப்படுகிறது.

இந்நிலையில், உலகில் முதன்முறையாக செயற்கை கருவூட்டல் முறையில் ஃபிராங்கோயிஸ் குரங்கை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த குரங்கு தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக, ஃபிராங்கோயிஸ் குரங்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் இரண்டாயிரம் ஃபிராங்கோயிஸ் குரங்குகள் உள்ள நிலையில், அதில் 1,500 குரங்குகள் சீனாவில் உள்ளன.