உலகம்

உலகிலேயே மிகவும் நீளமான 1,693அடி தொங்கு நடைபாலம் - போர்ச்சுகலில் திறப்பு

உலகிலேயே மிகவும் நீளமான 1,693அடி தொங்கு நடைபாலம் - போர்ச்சுகலில் திறப்பு

jagadeesh

உலகிலேயே மிகவும் நீளமான 1,693அடி தொங்கு நடைபாலம் - போர்ச்சுகலில் திறப்பு உலகிலேயே மிக நீளமானமானதாக கருதப்படும் தொங்கு நடைப்பாலம் போர்ச்சுகலில் திறக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகல்லில் உள்ள அரோவுகா (Arouca) பகுதியில் பசுமையான இயற்கை சூழலுக்கு மத்தியில், ஆற்றின் குறுக்கே இந்த தொங்கு நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. தரையில் இருந்து 175 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், 2.8மில்லியன் டாலர் மதிப்பில், இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தொங்கு நடைபாலத்தை கட்டிமுடிப்பது கடும் சவாலாக இருந்ததாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

1693 அடி நீளம் கொண்ட இந்த தொங்கு நடைபாலத்தில் பயணிப்பது மிகுந்த உற்சாகமளிப்பதாக இதில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். பாலத்தில் நடக்கையில், ஒவ்வொரு அடியிலும் பாலம் அசையும் போது அச்சமூட்டும் வகையில் இருந்தாலும், வித்யாசமான அனுபவமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். பாலத்தில் நடந்த படி இயற்கை சூழலை ரசிக்க முடியும் என்பதால் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.