உலக புகழ்பெற்ற ஓவியர் என்றால் அது லியனார்டோ டாவின்சி தான். இவர் பிரசித்தி பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்தவர். இந்நிலையில் டாவின்சி 2.7 X 2.7 இன்ச் அளவு கொண்ட குறிப்புகளை எழுதி வைக்கும் தாளில் (Post-it Note) வரைந்த 500 வருட பழமை மிக்க ஓவியம், 12.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனையாகி உள்ளது. இந்திய மதிப்பில் 90 கோடி ரூபாய்.
லண்டன் நகரில் உள்ள Christie's ஏல நிறுவனம் இந்த ஓவியத்தை ஏலம் விட்டது. இந்த ஓவியத்தில் ஒரு கரடியின் தலையை வரைந்துள்ளார் டாவின்சி. சில்வர் பாயிண்ட் என்ற டெக்னிக்கை பயன்படுத்தி டாவின்சி இதை வரைந்துள்ளார். அவரது ஓவிய ஆசிரியர் ஆண்ட்ரே, டாவின்சிக்கு இந்த கலையை கற்றுக் கொடுத்துள்ளார். கடைசியாக டாவின்சியின் ஓவியம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஏலம் விடப்பட்டுள்ளது.