உலகம்

இந்திய சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.5625 கோடி கடன் வழங்கும் உலக வங்கி

இந்திய சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.5625 கோடி கடன் வழங்கும் உலக வங்கி

jagadeesh

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உலக வங்கி ரூ.5625 கோடி கடன் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இன்றளவும் உற்பத்தி துறையானது ஓரளவுக்கேனும் வளர்ச்சி கண்டு வருகிறது எனில், அதற்கு முக்கிய காரணம் எம்எஸ்எம்இ எனும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான். கொரோனாவின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரிக்கும் விதமாக உலக வங்கியானது 750 மில்லியன் டாலர்களை (ரூ.5625 கோடி) வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த தொகுப்பானது தன்னம்பிக்கை இந்தியா திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட எம்எஸ்எம்இ தொகுப்பையும் ஆதரிக்கும். மேலும் World Bank's MSME Emergency Response program திட்டத்தில், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீளவும், லட்சகணக்காக வேலையிழந்தவர்களில் பாதுகாக்க இது ஏதுவாக அமையும் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவின் ஏற்றுமதியில் 40 சதவீத பங்களிப்பும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 30 சதவீத பங்கும் வகிக்கும் இந்திய எம்எஸ்எம்இ துறையானது, தற்போது கொரோனாவினால் கடுமையான மன அழுத்தத்தினை எதிர்கொண்டு வருகின்றது. சுமார் 150 - 180 மில்லியன் மக்கள் பணியாற்றும் இத்துறையில், ஆர்டர்கள் ரத்து, வாடிக்கையாளர்கள் இழப்பு, விநியோக சங்கிலி பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.