insta video image insta
உலகம்

பாலைவனப் பகுதியில் சிக்கித்தவிப்பு.. உபெர் நிறுவனத்தில் ஒட்டகம் புக்கிங்.. துபாயில் சவாரி செய்த பெண்

துபாயில் பாலை வனப்பகுதியில் உபெர் நிறுவனத்தில் வாகனங்களுக்குப் பதில், ஒட்டகம் புக் செய்யப்பட்டு அதன்மீது பயனர் ஏறிச்சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

சமீபகாலமாக வாடகை வாகனங்களை பயன்படுத்துவோர் மத்தியில் ரேபிடோ, ஓலா, உபெர் உள்ளிட நிறுவனத்தின் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது மக்களுக்குப் பயனளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. மற்ற நிறுவனங்களைவிட சற்று மலிவான கட்டணத்தில் இது வாடகைக்கு வாகனத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. கார், ஆட்டோ, டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் இந்தச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், துபாயில் பாலை வனப்பகுதியில் உபெர் வாகனத்திற்குப் பதிலாக, ஒட்டகம் வரவழைக்கப்பட்டு பயனரை ஏற்றிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

jetset.dubai என்ற இன்ஸ்டா முகவரியில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், துபாயின் பாலைவனப் பகுதியின் நடுவில் சிக்கித் தவிக்கும் இரண்டு பெண்கள், போக்குவரத்துக்காக கைப்பேசி மூலம் உபெர் பயன்பாட்டு செயலியில் கார்கள், மோட்டார் சைக்கிள்களுக்கு மத்தியில் எதிர்பாராதவிதமாக ஒட்டகத்தில் சவாரி மேற்கொள்ள ஆர்டர் செய்கின்றனர்.

அதன்படி, சில நிமிடங்களுக்குப் பின்னர், ஆண் ஒட்டகத்துடன் ஒருவர் அங்கு வருகிறார். அது, அந்தப் பயனரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. அல் படேயர், துபாய்-ஹட்டா வீதியில் படமாக்கப்பட்ட இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை 97,470 விருப்பங்களை பெற்றுள்ளது. மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. எனினும் இதுகுறித்து பயனர்கள் எதிர்மறையான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இது, பயணத்தை உறுதிப்படுத்துமா என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்க: குவியலாய் தங்கம், பணம்.. ரூ.4,203 கோடி மதிப்பு | ஹிஸ்புல்லா அமைப்பின் பதுங்குக்குழி கண்டுபிடிப்பு!