அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வாகனத்தை நோக்கி, நடுவிரலை நீட்டிய பெண் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், அக்டோபர் 28-ம் தேதி, விர்ஜினியாவில் உள்ள கோல்ஃப் மைதானத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அவர் காரின் அருகே சைக்கிளில் செல்லும் பெண் ஒருவர் நடுவிரலை அவர் வாகனத்தை நோக்கி காண்பிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நடுவிரலை காட்டிய பெண், ஜூலி பிரிஸ்க்மேன் (50) என்பதும் அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் வெள்ளை மாளிகை புகைப்படக்காரர் என்பதும் பின்னர் தெரிய வந்தது. அந்த புகைப்படத்தை ஜூலி, தனது சமூக வலைத்தள பக்கங்களில் புரொபைல் படமாக வைத்தார். இதையடுத்து அவர் பணிபுரியும் நிறுவனம் அவரை அழைத்தது. தங்கள் நிறுவனத்தின் சமூக வலைத்தளக் கொள்கையை மீறி விட்டதாகக் கூறி அவரை பணி நீக்கம் செய்துள்ளது.