அமெரிக்காவின் டென்னசி நகரைச் சேர்ந்தவர் ஜேட் டோட். 25 வயதான அவர் அண்மையில் ஆன்லைன் மூலமாக அவரது டிரைவிங் லைசன்ஸை புதுப்பித்துள்ளார். அவரது லைசன்ஸை புதுப்பித்த அமெரிக்க மோட்டார் வாகன துறை அதனை ஜேட் டோட்டின் இ-மெயில் முகவரிக்கு மெயில் செய்துள்ளது.
அந்த மெயிலை ஆவலோடு திறந்து பார்த்த டோட் அவரது புதுப்பிக்கப்பட்ட லைசன்ஸை பார்த்து விசித்திரமாக உணர்ந்துள்ளனர்.
‘அதில் என் போட்டோவுக்கு பதிலாக ஒரு காலி சேரின் படம் இடம்பெற்றிருந்தது’ என டோட் அமெரிக்க பத்திரிகைகளில் தெரிவித்துள்ளார்.
‘எனது லைசன்சில் இருந்த புகைப்பட பிழையை சரிசெய்ய மோட்டார் வாகனத் துறை அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கிருந்த அதிகாரிகளின் இது குறித்து தெரிவித்த போது அவர்கள் என் வார்த்தைகளை நம்பவே இல்லை.
நீண்ட விவாதிட்டத்திற்கு பின்னர் கம்ப்யூட்டரில் எனது லைசன்ஸ் எண்ணை போட்டு செக் செய்து பார்த்த பிறகு தான் தவறு நடந்ததை அதிகாரிகள் உணர்ந்தனர்’ எனவும் டோட் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் காலி சேர் உள்ள தனது லைசன்ஸை டோட் பகிர அதற்கு லைக்ஸ், ஷேர்ஸ் மற்றும் கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
‘எதிர்பாராத விதமாக இந்த பிழை நடந்துள்ளது’ என அமெரிக்க மோட்டார் வாகன துறை தெரிவித்துள்ளது.