உலகம்

ஸ்கூபா டைவிங் விபரீதம்: பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினீயர் அமெரிக்காவில் சீரியஸ்!

ஸ்கூபா டைவிங் விபரீதம்: பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினீயர் அமெரிக்காவில் சீரியஸ்!

webteam

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரில் உள்ள லக்காவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ருதி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் வேலை பார்த்துவருகிறார். இவருக்கும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சீதா ராமகிருஷ்ணாவுக்கும் கடந்த 11 மாதத்துக்கு முன், திருமணம் நடந்தது. பின்னர் அமெரிக்கா சென்றனர். புதிதாக திருமணம் ஆன இந்த ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன் ஹவாய் தீவுகளுக்கு சுற்றுலா சென்றது. அங்கு இரண்டு பேரும் ஸ்கூபா டைவிங் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களின் ஆக்ஸிஜன் மாஸ்க் தவறி விழுந்தது. இதையடுத்து விபத்தில் சிக்கினர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஸ்ருதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் கோமா நிலையில் சீரியசாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ஸ்ருதியின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அனைவரும் உடனடியாக அமெரிக்கா செல்ல முடிவெடுத்தனர். கொடுமை என்னவென்றால், ஸ்ருதியின் அப்பா விஸ்வநாத், அண்ணன், அம்மா என யாருக்குமே பாஸ்போர்ட் இல்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அவர்கள் தட்கல் பாஸ்போர்ட்டுக்கு முயன்றும் ஏதும் நடக்கவில்லை. 
இதையடுத்து பாஜக எம்.பி.எடியூரப்பாவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். அவரும் உதவுவதாக உறுதியளித்துள்ளார். பாஸ்போர்ட் கிடைத்த பின், பிறகு விசாவுக்கு அப்ளை செய்ய வேண்டும் என அவர்கள் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.