உலகம்

ஆண்களைவிட பெண்களுக்குதான் அதிக பணிச்சுமை..!

ஆண்களைவிட பெண்களுக்குதான் அதிக பணிச்சுமை..!

rajakannan

உலக அளவில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிக பணிச்சுமை உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆண்களுடன் ஒப்பிடுகையில், இரண்டரை மடங்கு வரை பெண்களுக்கு வீட்டுவேலைகள் கூடுதலாக உள்ளது என அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 9 ஆண்களுக்கு 5 பெண்கள் என்ற விகிதத்தில் பெண்கள் ஊதியப்பணிகளில் உள்ளனர். அதேபோல் 11 ஆண்களுக்கு 4 பெண்கள் என்ற விகிதத்தில் ஊதியமற்ற இதர வேலைபுரிவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், 4:9 என்ற விகித அளவில் பெண்கள் ஊதியப் பணியாற்றுவாதகவும், 3:30 என்ற அளவில் ஊதியமில்லா கூடுதல் பணிகளை கவனிப்பதாகவும் அந்த ஆய்வுத் தகவல் கூறுகிறது. மேலும், ஆண் பெண் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான காலம் இது என்றும் ஐநா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.