அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அங்குள்ள கெண்டக்கி மாகாண ரேபிட் ஹஷ் நகர மேயராக ‘நாய்’ ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வில்பர் பீஸ்ட் என்ற பிரெஞ்சு புல்டாக் வகை நாய் புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக பதிவான சுமார் 22985 வாக்குகளில் 13143 வாக்குகளை பெற்று மேயராகியுள்ளது வில்பர்.
இரண்டாவது இடத்தை பிடித்த பீகல் இன நாயும், மூன்றாம் இடத்தை பிடித்த கோல்டன் ரீட்ரீவர் நாயும் தூதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1990 முதல் மேயர் பதவிகளுக்கு நாயை தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேயருக்கான தேர்தல் அங்கு நடத்தப்படுகிறது.