உலகம்

சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக, ஆதரவாக வாக்களித்த நாடுகள் எவை?

சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக, ஆதரவாக வாக்களித்த நாடுகள் எவை?

JustinDurai

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஆதரவாக 13 நாடுகளும், தீர்ப்புக்கு எதிராக 2 நாடுகளும் வாக்களித்தன.

சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் குறித்த விசாரணை நடந்தது. அதில், 'ரஷ்யா உக்ரைனில் மேற்கொண்டு இருக்கும் ராணுவ நடவடிக்கையை  உடனே கைவிட வேண்டும்; போரை கைவிட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பிற்கு ஆதரவாக 13 நாடுகளும், தீர்ப்புக்கு எதிராக 2 நாடுகளும் வாக்களித்தன.  

சர்வதேச நீதிமன்றத்தில் 15 நாடுகளின் நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் அமெரிக்கா, இந்தியா, ஸ்லோவாக்கியா, பிரான்ஸ், மொராக்கோ, சோமாலியா, உகாண்டா,  ஜமைக்கா, லெபனான், ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய 13 நாடுகளின் நீதிபதிகள் வாக்கெடுப்பில் தீர்ப்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர். ரஷ்யா மற்றும் சீன நீதிபதிகள் தீர்ப்பிற்கு எதிராக வாக்களித்தனர். இந்தியாவும் தீர்ப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சர்வதேச நீதிமன்ற உத்தரவை புறக்கணித்தால்! ரஷ்யாவுக்கு செலன்ஸ்கி எச்சரிக்கை