முகமது மொக்பர் ட்விட்டர்
உலகம்

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரைசி மரணம்.. இடைக்கால அதிபராக பதவியேற்கிறார் மொக்பர்! யார் இவர்?

Prakash J

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. மூடுபனி காரணமாக அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டர் அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அவருடைய மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி இறந்ததைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் அடிப்படையில், ஈரானின் இடைக்கால அதிபராக அந்நாட்டின் முதல் துணை அதிபரான முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார். இவர், நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் உச்ச நீதித்துறை தலைவர் ஆகியோருடன் இணைந்து, அடுத்த 50 நாட்களுக்குள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடுட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: 620 ஏக்கர் பரப்பளவு! மொத்த கிராமத்தையே விலைக்கு வாங்கிய குஜராத் அரசு அதிகாரி.. கவலையில் ஆர்வலர்கள்!

யார் இந்த முகமது மொக்பர்?

செப்டம்பர் 1, 1955இல் பிறந்த மொக்பர், மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசியைப்போலவே, நாட்டின் அனைத்து விஷயங்களிலும் பேசப்படும் உச்ச தலைவர் அலி கமேனிக்கு நெருக்கமானவராகக் காணப்படுகிறார். 2021இல் இப்ராஹிம் ரைசி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மொக்பர் முதல் துணை அதிபர் ஆனார். கடந்த அக்டோபர் மாதம் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட ஈரானிய அதிகாரிகள் குழுவில் மொக்பருவும் சென்றிருந்தார்.

அப்போது, ரஷ்ய ராணுவத்திற்கு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வழங்க ஒப்புக்கொண்டார். முகமது மொக்பர் முன்பு, செட்டாட் (Setad)அமைப்பின் தலைவராக இருந்தார். இது உச்ச தலைவருடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிதி அமைப்பாகும். 2010ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடு, அணு அல்லது பாலிஸ்டிக் ஏவுகணை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் மொக்பர் பெயரைச் சேர்த்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது பெயரை நீக்கியது.

இதையும் படிக்க: CSK Vs RCB| கை கொடுக்க காத்திருந்த தோனி.. கண்டுகொள்ளாத RCB வீரர்கள்.. தேடிச் சென்ற விராட் கோலி!