உலகம்

மியான்மர் செல்ல தயார்: ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அறிவிப்பு

webteam

தங்கள் இனத்தை ஏற்றுக் கொண்டு அங்கீகரிப்பதாக இருந்தால் மீண்டும் மியான்மர் செல்ல தயாராக இருப்பதாக வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகினே மாகாணத்தில் வசித்து வரும் ரோஹிங்யா இன மக்களை தங்கள் நாட்டு‌ குடிமக்களாக அங்கீகரிக்க மியான்மர் தொடர்ந்து மறுத்து வருகிறது. சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து அண்மையில்‌ மவுனம் கலைத்த மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சியும் அவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக எந்தவொரு தெளிவான அறிவிப்பையும் வெளி‌யிடவில்லை.

இந்நிலையில் வங்கதேசத்தின் டெங்காலி முகாமில் தங்கி இருக்கும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள், தங்களுக்கான அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே மீண்டும் மியான்மர் திரும்பப் போவதாக உறுதிபட தெரிவித்துள்ளனர்.