உலகம்

ரஷ்யாவுடன் போர் பதற்றம் - துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி பெறும் உக்ரைன் நாட்டு பொதுமக்கள்

Veeramani

ரஷ்யாவின் எல்லையையொட்டியுள்ள உக்ரைன் நாட்டு பொதுமக்களும் துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை கற்று வருகின்றனர்.

உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா படைகளை குவித்துள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா படைகள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, உக்ரைனின் கார்கிவ் பகுதி மக்கள் துப்பாக்கிச் சூடுதல் உள்ளிட்ட தற்காப்பு கலைகளுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர். ஆண்களை விட பெண்களே அதிகபேர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யா தாக்குதல் நடத்தினால் கார்கிவ் பகுதிதான் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் வசிப்பிடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என கூறும் அப்பகுதி மக்கள், தற்காப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.