உலகம்

'விண்வெளிக்கு செல்ல ஆசையா?' - ரூ.2.2 கோடி செலவு செய்தால் போதுமாம்! சீனாவின் புது திட்டம்!

'விண்வெளிக்கு செல்ல ஆசையா?' - ரூ.2.2 கோடி செலவு செய்தால் போதுமாம்! சீனாவின் புது திட்டம்!

webteam

விண்வெளிக்கு சுற்றுலா விமானங்களை அனுப்பும் திட்டத்தை 2025 ஆம் ஆண்டுக்குள் துவங்க சீனா திட்டம் தீட்டியிருக்கிறது.

பூமியில் சுற்றுலா செல்வதெல்லாம் பழைய கதையாகி விட்டது. விண்வெளிச் சுற்றுலாதான் தற்போதைய தலைமுறையினரின் வாழ்நாள் இலக்காக மாறி வருகிறது. ஸ்பெஸ் எக்ஸ் மாதிரியான தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இதை தனி தொழிலாக மாற்றி வருமானமும் பார்க்கத் துவங்கியிருக்கின்றன. இந்நிலையில் சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) 2025 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு சுற்றுலா விமானங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த பயணத்திற்கு ஒரு பயணியிடம் இருந்து 2-3 மில்லியம் யுவான் வரை வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு முறை விண்வெளிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இந்திய மதிப்பில் ரூ. 2.2 கோடி முதல் 3.4 கோடி வரை வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மூத்த ராக்கெட் விஞ்ஞானி மற்றும் பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட ராக்கெட் நிறுவனமான CAS ஸ்பேஸின் நிறுவனர் யாங் யிகியாங் சீன ஊடகத்திடம் மூன்று விண்வெளி பயண முறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறினார்.