உலகம்

வங்கதேச தேர்தலில் வன்முறை.. 12 பேர் உயிரிழப்பு

வங்கதேச தேர்தலில் வன்முறை.. 12 பேர் உயிரிழப்பு

Rasus

வங்கதேசத்தில் தேர்தல் தொடர்பான வன்முறையில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வங்கதேசத்தில் அடுத்த பிரதமர் யார்..? என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கிட்டத்தட்ட 10 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததால் போலீசார் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிட்டத்தட்ட 6 லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் தேர்தல் தொடர்பாக பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவம் நடைபெற்றது.

இந்த வன்முறை சம்பவத்தில் கிட்டத்தட்ட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி ஆதரவாளர்களிடையே இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் உயிரிழந்த நிலையில், வன்முறையை தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. வன்முறை சம்பவத்திற்கு மத்தியில் தேர்தல் 4 மணிக்கு நிறைவடைந்தது. இந்த முறையும் பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று, 4வது முறையாக ஆட்சி அரியணையில் அமருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.