video image x page
உலகம்

இங்கிலாந்தில் வெடித்த வன்முறை | தீவைத்து எரிக்கப்பட்ட பேருந்து.. போலீஸ் குவிப்பு! பின்னணி என்ன?

Prakash J

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரின் ஹரேஹில்ஸ் பகுதியில் திடீரென நேற்று வன்முறை வெடித்தது. இதில் பேருந்து ஒன்று தீவைக்கப்பட்டது. மேலும், போலீஸ் வாகனம் ஒன்றும் கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து போலீஸ்காரர்களுக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையே பெரிய மோதல் வெடித்தது. அப்போது வன்முறையாளர்கள் கற்களை போலீசார் மீது வீசினர். இந்த வன்முறை வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் ஹரேஹில்ஸ் பகுதி மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையின்போது, இதுவரை காயமடைந்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:”அரசு ஆதரவு மதவெறி”-உ.பி. கன்வார் யாத்திரை.. வழியில் உள்ள கடைகளில் உரிமையாளர் பெயர்களை எழுத உத்தரவு!

என்ன நடந்தது?

லக்‌ஷார் தெருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரிடம் இருந்து 5 குழந்தைகளை சமூக சேவை துறையைச் சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை-க்கு அவனுடைய சகோதரனால் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு இது சோஷியல் சர்வீஸ் சார்ந்தது என்று கூறியுள்ளனர். அதனையடுத்தே குழந்தைகள் அந்த குடும்பத்தினரிடம் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, குழந்தையின் பெற்றோர் உள்ளிட்டோர் சாலையில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.