உலகம்

வியட்நாமில் கொரோனா புதிய அலை என எச்சரிக்கை: முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகள்

வியட்நாமில் கொரோனா புதிய அலை என எச்சரிக்கை: முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகள்

webteam

வியட்நாம் நாட்டில் நகரங்களுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு தொற்று கண்டவர்களை அடையாளம் கண்டுவருகிறார்கள். புதிய அலை பரவும் அச்சம் இருப்பதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைளில் அரசு நிர்வாகம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பு முதல் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், வியாழன்று  தானாங்க்  நகருக்கு வந்தவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒன்பது பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். சுகாதாரத்துறை சார்பில் தெருக்கள்தோறும் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.

ஜூலை 1 ஆம் தேதி முதல் தானாங் நகருக்கு வருகைதந்த மக்கள் தாமாக முன்வந்து சோதனை செய்துகொள்ளவேண்டும் என்று எஸ்எம்எஸ் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்கள். சமீபத்தில் ஆறு நகரங்களில் தொற்று கண்டறியப்படுவதால், கொரோனாவின் புதிய அலை ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் சந்தேகிக்கிறார்கள்.  

நோய்த் தடுப்பு நடவடிக்கையாக ஹனாய் போன்ற மக்கள் நெரிசல் உள்ள பெருநகரங்களில் மக்கள் நடமாடுவதற்கும் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. “இன்றே செயல்படுங்கள் விரைவாக செயல்படுங்கள்” என வியட்நாம் அரசு மக்களை எச்சரிக்கையுடன் கேட்டுக்கொண்டுள்ளது.