உலகம்

18 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த கத்திரிக்கோல்

webteam

வியட்நாமில் நோயாளி ஒருவரின் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட கத்தரிக்கோல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 54 வயதான மா வேன் நாட் என்பவர் கடந்த 1998ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இந்த நிலையில் 18 ஆண்டுகளாக வயிற்று வலியால் தவித்த அவர் மீண்டும் அதே மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்திரிகோல் அவர் வயிற்றில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து கத்தரிகோல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. சுமார் 18 ஆண்டுகளாக வயிற்றில் கத்தரிகோலும் வலியுமாக வாழ்ந்து வந்த மா வேன் நாட் ஒருவழியாக வலியில் இருந்து மீண்டார்.