உலகம்

அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம்: வெனிசுலா அதிபர் மதுரோ திட்டவட்டம்

அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம்: வெனிசுலா அதிபர் மதுரோ திட்டவட்டம்

webteam

வெனிசுலாவில் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு இடையே தேர்வு செய்யப்பட்ட புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம் உள்ளது என்று வெனிசுலா அதிபர் மதுரோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்

வெனிசுலாவில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அரசியல் நிர்ணய சபை, முழு அதிகாரத்தையும் கொண்டது என அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார். சர்ச்சைகளுக்கும், குழப்பங்களுக்கும் மத்தியில் அரசியல் நிர்ணய சபை பதவியேற்ற பிறகு முதல் முறையாக அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

வெனிசுலாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அரசியல் நிர்ணய சபை மட்டுமே ஒரே வழி என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடந்த அரசியல் நிர்ணய சபைத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. அந்தத் தேர்தலில் அதிபர் மதுரோ முழு அதிகாரத்தையும் தன் வசமாக்கிக் கொள்ள ஏதுவாக நியாயமற்ற முறையில் தேர்தலை நடத்தியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட புதிய அரசியல் நிர்ணய சபைக்கு முழு அதிகாரம் உள்ளது என மதுரோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.