உலகம்

பனி மூட்டத்தில் ஒன்றன் மீது ஒன்றாக வாகனங்கள் மோதி மூவர் பலி! வெளியான பகீர் வீடியோ!

பனி மூட்டத்தில் ஒன்றன் மீது ஒன்றாக வாகனங்கள் மோதி மூவர் பலி! வெளியான பகீர் வீடியோ!

webteam

அமெரிக்காவில் கடும் பனிமூட்டத்தில் வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதி ஏற்படட் பயங்கர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. நேற்று மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் கண்மூடித்தனமான பனி மூட்டம் காணப்பட்டது. எதிரே இருப்பது என்னவென்றே தெரியாத அளவுக்கு மிக மோசமான பனிமூட்டம் நிலவியது. பல வாகனங்கள் நெடுங்சாலையில் குவிந்ததால் ஒன்றன்மீது ஒன்று மோதத் துவங்கின. பலரும் வாகனத்தை இயக்கியதால் மோசமான விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நெடுஞ்சாலையில் மோதியதில் லாரிகள், டிராக்டர்கள் மற்றும் கார்கள் உட்பட 50 முதல் 60 வரையிலான வாகனங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பனி நிறைந்த சாலையில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. விபத்தின் பின்னர் சில வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன, பின்னர் அது அணைக்கப்பட்டது. விபத்தால் நெடுஞ்சாலையில் பல மைல்களுக்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது, இதனால் காவலர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அந்த இடத்தை அடைவதை கடினமாக்கியது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது, விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது ஷுயில்கில் கவுண்டியில் ஒரு மாதத்தில் இரண்டாவது பெரிய குவிப்பு என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை 10:30 மணியளவில் பனி மூட்டத்தால் ஏற்பட்ட பூஜ்ஜியத்திற்கு அருகில் வெப்பநிலை பதிவானதால் இந்த விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.