உலகம்

அமெரிக்காவில் கடுங்குளிர்... 21 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடுங்குளிர்... 21 பேர் உயிரிழப்பு

Rasus

அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெய்து வரும் பனிப்பொழிவு மற்றும் கடுங்குளிருக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்டார்டிகாவை விட கடுமையான குளிர் நிலவுவதால், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர். வெந்நீரை வெளியே ஊற்றினாலும், உடனடியாக உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 17 டிகிரி செல்சியஸுக்கு குளிர் நிலவுகிறது. குளிரில் உறைந்து உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வீடற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

குளிரால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பனிப்பொழிவால் கொடியில் காய வைத்த ஆடைகளும் உறைந்து அந்தரத்தில் தொங்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.