உலகம்

அமெரிக்கா: வாஷிங்டனில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமெரிக்கா: வாஷிங்டனில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

kaleelrahman

அமெரிக்காவின் வாஷிங்டனில் நிலவும் கடும் பனிப்பொழிவால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி வருகிறது. இதனால், சாலைகள், வீடுகள், மரங்கள், வாகனங்கள் பனிப்போர்வை போர்த்தி காட்சியளிக்கின்றன. மேலும் குளிர் வாட்டி வருவதால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியிருப்பதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனிடையே, சாலைகளில் குவிந்துள்ள பனியை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.