அமெரிக்கா முகநூல்
உலகம்

இப்படியா ஆகணும்?.. உலகை சுற்றிப்பார்க்க வீட்டை விற்று, வேலையை விட்ட பெண்.. காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் 3 ஆண்டுகள் கப்பலில் உலகை சுற்ற ஆசைப்பட்டு வீட்டை விற்று, வேலையை உதறிய தள்ளிவிட்டு பெண் ஒருவர் வந்த நிலையில்,. திடீரென கப்பலின் உரிமையாளர் பயணத்தை ரத்து செய்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அமெரிக்காவில் 3 ஆண்டுகள் கப்பலில் உலகை சுற்ற ஆசைப்பட்டு வீட்டை விற்று, வேலையை உதறிய தள்ளிவிட்டு பெண் ஒருவர் வந்த நிலையில்,. திடீரென கப்பலின் உரிமையாளர் பயணத்தை ரத்து செய்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை என்பதை பலர் தங்களின் வாழ்நாளில் அனுபவித்திருப்பார்கள்... அப்படிதான் இங்கே புளோரிடாவை சேர்ந்த ஒருவருக்கும் நடந்துள்ளது.. இதனால், அவர் இழந்ததோ அனைத்தையும் .. அப்படி என்ன நடந்தது? பார்க்கலாம்..

புளோரிடாவை சேர்ந்தவர் மெரிடித் ஷே.. இவருக்கு வெகுநாட்களாகவே உலகை சுற்றுப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. இந்தநிலையில்தான், அதற்காக சரியான சந்தர்ப்பமாக ஒரு பம்பர் ஆஃபரும் வருகிறது. life at sea என்ற பயணத்தைப் பற்றி மெரிடித் கேள்விப்பட எப்படியாவது அதில் சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.

life at sea எனப்படுவது மூன்றே வருடங்களில் 135 நாடுகளுக்கு கப்பலில் பயணம் மேற்கொள்வதுதான். மூன்று வருடத்திற்கு சேர்த்து மொத்த செலவு 4 கோடி ரூபாய்.

இதில் எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று நினைத்த மெரிடித், இதற்காக தனது வீட்டை விற்று அதற்கான பணத்தையும் ஏற்பாடும் செய்து விடுகிறார். அதுமட்டுமல்ல, இதற்காக, தனது வேலையையும் ராஜினாமா செய்துவிடுகிறார்.. இதனைத்தொடர்ந்து, அதற்கான கப்பலில், 7 ஆவது மாடியையும் புக் செய்து விடுகிறார் .. இதற்காக நான்கு சூட்கேஸ்களையும் பேக் செய்துவிட்டு, திட்டமிட்டபடி தனக்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து கொள்கிறார்.

இதன்பின்னர், மியாமியில் இருந்து புறப்பட தயாராக இருக்கிறார்.. ஆனால், அப்பொழுதுதான் காத்திருக்கிறது அதிர்ச்சி சம்பவம்.. வந்து சேர வேண்டிய நேரத்திற்கு கப்பல் வரவில்லை.. இது குறித்து அதிகாரிகளிடம் மெரிடித் கேட்டதற்கு, பஹாமாஸிலிருந்து கப்பல் புறப்படும், புளோரிடாவிலிருந்து புறப்படும் என்று மாறி மாறி தகவல்கள் தெரிவிக்கிறார்கள்.. ஆனால், புறப்படவில்லை. இந்தநிலையில்தான், கப்பலே ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அறிவிப்பு வருகிறது.

இதனால், மனமுடைந்த மெரிடித், இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். தனது நிலைமையை எடுத்துக்கூறுகிறார்.. இருப்பினும் நினைத்தது நடக்கவில்லை.

தொடர்ந்து, க்ரூஸ் நிறுவனமான, myre cruise வாடிக்கையாளர்களுக்கு மூன்று தவணைகளுக்குள் வங்கிய பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளிக்கிறது . ஒரு கட்டத்தில் இதனை ஏற்றுக்கொண்ட மெரிடித், தனது பயணத்தை சவுதி அரேபியா, துபாய் என மாற்றிக்கொள்ள திட்மிட்டுள்ளார்.

இது குறித்து மெரிடித், தெரிவிக்கையில், ” மனிதர்கள் இருக்கும் வரை வாழ்க்கையும் முடிவதில்லை. எப்பொழுது ஒருவர் தனது நம்பிக்கையை இழக்கிறாரோ அப்போதுதான் அவர்களின் வாழ்க்கையே முடிவடைகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மெரிடித்தின் இந்த தன்னம்பிக்கையை கண்ட மக்கள், நாம் நினைத்தது நமக்கு கிடைக்கவில்லை எனில், அதை விட சிறப்பான ஒன்று நம்மை தேடி வந்துக்கொண்டிருக்கிறது என்று நினைத்து அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும் என்று அவரை பாராட்டி வருகின்றன.