அமெரிக்க அதிபர் தேர்தல் முகநூல்
உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்|டிரம்ப்புடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க போகிறாரா கமலா ஹாரிஸ்?

PT WEB

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புடன் செப்டம்பர் 10ஆம் தேதி நேரடி விவாதத்தில் பங்கேற்க போவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதேசமயம், ஜனநாயக கட்சி சார்பில் முதலில் ஜோ பைடன் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. இருவரும் நேரடி விவாதம் நடத்திய நிலையில், ஜோ பைடன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த பைடன், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிசை முன்மொழிந்தார். அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது.

விரைவில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என கூறப்படும் நிலையில், செப்டம்பர் 10ஆம் தேதி நேரடி விவாதத்திற்கு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். மேலும்தான் அனைத்திற்கும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.