உலகம்

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே.. ஹெச்-1பி விசாக்களுக்கு புதிய கட்டுப்பாடு!

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே.. ஹெச்-1பி விசாக்களுக்கு புதிய கட்டுப்பாடு!

JustinDurai

வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசாக்களுக்கு அமெரிக்க அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் தங்கி வேலை பெறுவதற்காக அந்நாட்டு அரசு H-1B விசாக்களை வழங்கிவருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலின் எதிரொலியாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்காக ஹெச்-1பி விசாக்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் அரசு தற்காலிக தடை விதித்தது. இதன்பின், தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஹெச்-1பி விசாக்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், ஹெச்-1பி விசாக்களுக்கு அமெரிக்க அரசு மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இப்புதிய கட்டுப்பாடுகள் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. .

பொருளாதார பாதுகாப்பே நாட்டின் பாதுகாப்பு என்று தெரிவித்துள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் சாட் வுல்ஃப், இதை சரியாக கையாளுவதற்காக, அமெரிக்க தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க சட்டரீதியாக எல்லாவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.