உலகம்

யோகா தடையை முடிவுக்கு கொண்டு வந்தது அமெரிக்க அரசு : நமஸ்தேவுக்கு தடை!

யோகா தடையை முடிவுக்கு கொண்டு வந்தது அமெரிக்க அரசு : நமஸ்தேவுக்கு தடை!

Veeramani

யோகா தடையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான மசோதாவை அமெரிக்காவின் அலபாமா மாநில அரசு நிறைவேற்றுகிறது, ஆனால் 'நமஸ்தே' பயன்பாடு அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 30 ஆண்டு கால தடைக்குப் பின்னர் அலபாமா மாநில பொதுப் பள்ளிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட யோகா படிப்புகளை வழங்க அனுமதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்காவின் அலபாமா மாநில பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் அலபாமா பிரதிநிதிகள் சபை 73-25 என்ற எண்ணிக்கையில் வாக்களித்தது, இதனால் இந்த மசோதா வெற்றிபெற்றது. பள்ளியில் யோகா காட்சிகளுக்கும், நடைமுறைகளுக்கும் வரம்பு விதிக்கப்படும் என்றும், "நமஸ்தே" வாழ்த்து மற்றும் கற்பித்தல் வணக்கம் போன்றவை தடைசெய்யப்படும் என்றும் இம்மசோதா கூறுகிறது. முன்பாக அலபாமா கல்வி வாரியம் 1993 இல் யோகாவை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.