அதிபர் ஜோ பைடன் File image
உலகம்

“இஸ்ரேல் - ஹமாஸ் இடையே விரைவில் உடன்பாடு” - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை

பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே விரைவில் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

webteam

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் தற்காலிக சண்டை நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பது தொடர்பாக உடன்பாடு ஒன்று விரைவில் எட்டப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பைடன், “தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எந்நேரமும் உடன்பாடு எட்டப்படலாம்” எனவும் குறிப்பிட்டார்.

jo biden

இதனிடையே இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,300ஆக அதிகரித்துள்ளதாக காஸா சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 5,600 பேர் குழந்தைகள் எனவும், 3,550 பேர் பெண்கள் எனவும் காஸா சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் காஸாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனை தாக்கப்பட்டது குறித்து உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் இருந்து தங்கள் வீரர்களை நோக்கி அவர்கள் சுட்டதால் திருப்பி குறிப்பிட்ட இடத்தை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.