அமெரிக்காவின் 47ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நேற்று (நவ.5) நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம் களம் கண்டனர். இதனால் போட்டி கடுமையாக இருந்தது. இந்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்றார். இதையடுத்து அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மீண்டும் அமெரிக்க அதிபர் நாற்காலியில் டொனால்டு ட்ரம்ப் அமர இருப்பதால், இந்தியாவுக்குச் சாதகமா இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்பது குறித்தும், இதனால் மாறப்போகும் 5 விஷயங்கள் குறித்தும் இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.