உலகம்

உக்ரைனிலிருந்து தூதரக அதிகாரிகள் வெளியேற அமெரிக்கா உத்தரவு

உக்ரைனிலிருந்து தூதரக அதிகாரிகள் வெளியேற அமெரிக்கா உத்தரவு

Veeramani

உக்ரைனில் இருந்து தனது தூதரக அதிகாரிகள் குடும்பத்துடன் உடனே வெளியேற வேண்டும் என அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது

உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்ய படைகள் எந்நேரமும் ஊடுருவலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. அமெரிக்கா தனது பாதுகாப்பு கூட்டணியான நேட்டோவை விஸ்தரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் அதில் உக்ரைனையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தனது அண்டை நாடான உக்ரைன் அமெரிக்காவின் வலிமையான பாதுகாப்பு கூட்டணியின் ஒரு அங்கமாவதை ரஷ்யா விரும்பவில்லை. உக்ரைனை நேட்டோவில் சேர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் ஒரு புறம் பேச்சுக்கள் நடந்துவந்தாலும் உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. எந்நேரமும் உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைனிலிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற உள்ளனர். இதற்கிடையே உக்ரைனில் தனது ஆதரவாளரை கொண்டு பொம்மை அரசு அமைக்க ரஷ்யா முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றஞ்சாட்டியுள்ளது, ஆனால் இதை ரஷ்யா மறுத்துள்ளது.