work from home  facebook
உலகம்

மனைவியின் WFH வேலையால் 2 மில்லியன் டாலர் சம்பாதித்த அமெரிக்க கணவர்! க்ளைமேக்ஸில் எதிர்பாரா ட்விஸ்ட்!

மனைவியின் ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலையில் வந்த செல்போன்கள் அழைப்புகளின் மூலம் 2 மில்லியன் டாலர் பணம் சம்பாதித்த அமெரிக்க கணவர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

மனையின் ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலையில் வந்த செல்போன்கள் அழைப்புகளின் மூலம் 2 மில்லியன் டாலர் பணம் சம்பாதித்த அமெரிக்க கணவர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் டைலர் லூடன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். டிராவல் செண்டர் ஆப் அமெரிக்கா என்ற தனியார் நிறுவனத்தில் இவரது மனைவி பணிபுரிந்து வந்துள்ளார்.

work from home

கொரானா காலங்களில் வீட்டில் இருந்தே பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டதால் தற்போது வரை அதுவே அவருக்கு நடைமுறையிலும் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் வேலைசெய்து வந்த நிறுவனம் மற்றொரு நிறுவனத்தினை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த டீலிங்குக்கான அனைத்து முடிவுகளும் இவரது மனைவியால் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்த மனைவி பேசும் செல்போன் அழைப்புகளை எல்லாம் வீட்டின் பக்கத்து அறையில் இருந்து கேட்டுள்ளார் இவரின் கணவர். இந்த டீல் வெற்றிகரமாக முடிந்தால் டிராவல் செண்டர் ஆப் அமெரிக்காவின், பங்குகள் அதிகரிக்கும் என்று நன்கு அறிந்து கொண்ட இவர். இதற்காக தனது ஓய்வூதிய பணத்தினை எல்லாம் விற்று இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளார்.

நினைத்தப்படி அந்நிறுவனத்தின் பங்குகளும் உயர்ந்துள்ளது. இதன்மூலம் 2 மில்லியன் டாலர் வரை சம்பாதித்துள்ளார். தன் மனைவிக்கு தெரியாமலேயே இதனை செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தான் செய்ததை தன் மனைவியிடம் தெரிவிக்கவே, இதனால் கோபமடைந்த மனைவி விவாகரத்திற்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வரவே, அந்நாட்டின் விசாரணை அமைப்புகளும் இவரின்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் பெற்ற பணத்தினையும், இதனை செய்ததற்கான அபராத கட்டணத்தினையும் திரும்ப செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஒர்க் ஃப்ரம் ஹோம் ஆல் நடந்த இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.