ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஒமைக்ரான் முதல் தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடைவிதித்தது. இந்நிலையில் தற்போது ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் குறைந்து வருகிறது. எனவே, ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள 8 நாடுகளுக்கான பயணத்தடையை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதன்படி, தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமிபியா, லெசோதோ, எஸ்வாடினி, மொசாம்பிக் மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கான பயணத்தடை வரும் டிசம்பர் 31 திரும்பப் பெறப்படும் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெவின் முனோஸ் தெரிவித்துள்ளார்.