உலகம்

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை: அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை: அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்

webteam

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா குறுக்கிட்டது உள்ளிட்ட விவகாரங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதிநிதிகள் சபை ஒப்புதலுக்குப் பின் இந்த மசோதா, செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது. அதன் பின்னர் அதிபரின் ஒப்புதல் கோரப்படும். இந்த சட்ட மசோதாவிற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், அதற்கு ஒப்புதல் அளிப்பாரா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் இதுகுறித்து வெள்ளை மாளிகை ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்த நினைக்கும் ட்ரம்பின் முயற்சிக்கு, இந்த மசோதா சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.