உலகம்

விமானங்களில் எலெக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை

விமானங்களில் எலெக்ட்ரானிக் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை

webteam

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் விமானங்களில் ஸ்மார்ட்போனைவிட பெரிய எலெக்ட்ரனிக் பொருட்களை எடுத்துவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரானிக் பொருட்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் உள்ள 8 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் 8 விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்களில் கணிணிகள், லேப்டாப்புகள், டேப்லெட்டுகள் போன்ற பெரிய அளவிலான எலெக்ட்ரானிக் பொருட்களை எடுத்துவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று (மார்ச் 21) முதல் 4 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.